தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவிற்குள் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட அந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளும் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்தந்த பகுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு, அருகில் செயல்பட்டு வரும் இதர டாஸ்மாக் கடைகளில் புதிய பணி ஒதுக்கீடு செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
