அன்புமணி கொஞ்சம் விவரமானவர்னு நினச்சேன்… ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியல… அமைச்சர் துரைமுருகன் காட்டம்..!!

Spread the love

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன் என்று அமைச்சர் துரை முருகன் விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பாமக தலைவர் அன்புமணி தன்னுடைய தந்தை ராமதாசை எதிர்த்து தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டு அவருகிறார். இது குறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமை கிடையாது. நாம் சொல்லப்போவதும் இல்லை. ஆனால் இந்த நடை பயணத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது நான் அமைச்சராக இருந்த ஆட்சி  பணிகள் குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியை குறித்து கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.

அதாவது இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் .அவரை நான் கேட்கிறேன் பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியது உண்டா? என்றுகேட்டு   இருக்கிறார். அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நான் நினைத்திருந்தேன் .ஆனால் வேலூரில் என் மீது அவர்  சாட்டிய  தவறான குற்றச்சாட்டில் இருந்து அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்துள்ளார். கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தான், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகிற பணியை ஆரம்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக நான் இந்த துறைக்கு அமைச்சராக இருந்தபோது, கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்திலும், ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும் பாலாறு, கன்னாற்றில், சின்னவேம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன். இந்த வருடம்  அமுண்டி, வேப்பாலை ஆகிய இடங்களிலும் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அன்புமணிக்கு சிறிய வேண்டுகோள்.  இனிமேலாவது பேசுவதற்கு முன்பு யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளி விவரத்தோடு பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

7 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

7 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

8 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

8 மணத்தியாலங்கள் ago