கரூர் துயரம்…! பிஞ்சு குழந்தைகளின் உடலை பார்த்து கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷ்…. கண் கலங்க வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 27, 2025

Spread the love

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கருவூருக்கு விரைந்து சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகளின் உடல்களை பார்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுத நிலையில் அவருக்கு செந்தில் பாலாஜி ஆறுதல் கூறி தேற்றினார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.