காலையிலேயே சோகம்…. கரூர் துயரம்: உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு…!

By Nanthini on புரட்டாதி 28, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்தனர்.

50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

   

கரூர் அரசு மருத்துவமனையில் இரவு முழுவதும் கதறல்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் நெரிசலில் சிக்கி வந்தவர்களின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒன்பது குழந்தைகள் உட்பட 39 பேர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.