நாளை முதல் அரையாண்டு விடுமுறை… பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு…!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நாளை  முதல் அரையாண்டு விடுமுறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்விதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது எனப் பள்ளிக்கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

இது குறித்துப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “விடுமுறை என்பது மாணவர்கள் தங்களை அடுத்த பருவத்திற்குப் புத்துணர்ச்சியூட்டிக் கொள்வதற்காகவே வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் வகுப்புகளை நடத்தி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். தேர்வுகளை முடித்துவிட்டு விடுமுறைக்குத் தயாராகியுள்ள மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.