இளைஞர்கள் ஒரு நடிகை மீது ஆர்வம் காட்டுவதைப் போல, இளம்பெண்கள் ஒரு குறிப்பிட்ட நடிகர் மீது மிகுந்த ஆசை வைத்துள்ளதாகத் தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகர் யார் என்பதைத் தன்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்று குறிப்பிட்ட அவர், இளம்பெண்களின் ஆதரவு அந்த நடிகருக்குச் சென்றுவிடாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று இளம்பெண்களிடம் பேசி, அவர்களின் வாக்குகள் திசைமாறி விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இளம்பெண்களின் வாக்கு வங்கி குறித்து அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
