“தைரியம் இருந்தால், தில் இருந்தால், திமுக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சோஷியல் மீடியாவுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லச் சொல்லுங்கள்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக சவால் விடுத்துள்ளார். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர், திமுகவின் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும் தனது தொகுதி தேர்தல் களம் குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “என்னுடைய தொகுதியில் நான் வெறும் 30 லட்சம் ரூபாய் கூட செலவு செய்யவில்லை; ஆனால், என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் சுமார் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்தார்” என்று பரபரப்பான குற்றச்சாட்டைப் பகிர்ந்துள்ளார். தவெக கூட்டத்தில் திமுகவை நோக்கி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பியுள்ள இந்தச் சவாலும், விமர்சனமும் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
