குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட விரும்பும் தொழில்முனைவோருக்கு, மினரல் வாட்டர் சப்ளை தொழில் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. குடிநீருக்கான தேவை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை ஆண்டு முழுவதும் நிலைத்திருப்பதால், இந்தத் தொழிலில் வருமானம் குறைய வாய்ப்பில்லை.
ரூ. 10,000 முதல் ரூ. 12,000 வரையிலான குறைந்த முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்தத் தொகையானது காலியான 20 லிட்டர் கேன்களுக்கான வைப்புத் தொகை, பாக்கெட் வாட்டர் பாட்டில்கள், டெலிவரிக்கான போக்குவரத்துச் செலவு மற்றும் ஆரம்ப மொபைல் செலவுகளுக்குப் போதுமானது.
தொடக்க வழிமுறைகள்:
உரிமம் பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தல் அல்லது அருகிலுள்ள வாட்டர் பிளான்ட்களில் 20 லிட்டர் ஜார்களை மொத்த விலையில் (Wholesale) வாங்கலாம்.
சுமார் 25 முதல் 30 ஜார்களை வைத்திருக்க ஒரு சிறிய ஸ்டோரேஜ் இடம் போதுமானது.
வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் சமூக ஊடகக் குழுக்கள் மூலம் வாடிக்கையாளர்களைச் சேகரிக்கலாம். ‘முதல் ஆர்டருக்கு இலவச டெலிவரி’ போன்ற சலுகைகளை வழங்கலாம்.
வருமானம்:
20 லிட்டர் ஜாரின் மொத்த விலை சுமார் ரூ. 20-25 ஆக இருக்க, சில்லறை விலை ரூ. 35-40 வரை விற்கப்படுகிறது. ஒரு ஜாருக்குக் கிட்டதட்ட ரூ. 10 முதல் 15 வரை லாபம் கிடைக்கும்.
ஒரு நாளைக்கு 50 ஜார்கள் சப்ளை செய்தால், தினசரி லாபம் சுமார் ரூ. 600 வரை கிடைக்கும். இதன் மூலம், மாதத்திற்கு ரூ. 18,000 லாபம் ஈட்ட முடியும். அதாவது, முதல் மாதத்திலேயே முதலீட்டைவிட 3 மடங்கு வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.
இந்தத் தொழிலுக்கு ஆர்டர்கள் எடுக்க ஒருவர், டெலிவரி செய்ய ஒருவர் என இருவர் மட்டுமே போதும். மேலும், ரொக்கமாகவே பணம் கிடைப்பதால் பணப்புழக்கம் சுலபமாக இருக்கும். டெலிவரி சேவையுடன் குளிர்பானங்கள் போன்ற பிற பொருட்களையும் சேர்த்து, இந்த வணிகத்தை எளிதாக விரிவாக்கலாம்.
கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…
செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…
பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…
நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…