விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (25) என்பவர் நரிக்குடி பகுதியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் சில வருடங்களாக அஷ்ரத் ஆக பணியாற்றி வருகின்றார். அந்தப் பகுதி மக்கள் குழந்தைகளுக்கு ஓதுவது மற்றும் உடல்நல குறைபாடுகளை சரி செய்து கொள்ள பள்ளிவாசலுக்கு செல்வது வழக்கம். அதனைப் போலவே நரிக்குடி பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் நீண்ட நாட்கள் ஆக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் ஜூம்மா பள்ளிவாசல் குறித்து தெரிவித்து அங்கு சென்று வரும்போது அறிவுரை கூறியுள்ளார்.
அதன்படி இளம் பெண்ணும் நேற்று முன்தினம் பள்ளிவாசலுக்கு சென்ற நிலையில் அங்கு அஸ்ரத் ஆக பணியாற்றி வந்த அப்துல் அஜீஸ் பெண்ணுக்கு ஓதிவிட்டு, இதேபோல தொடர்ந்து வாங்க நாளை நான் சொல்லும் நேரத்திற்கு தனியா வாங்க என்று தெரிவித்து அனுப்பியுள்ளார். பிறகு மறுநாள் பள்ளிவாசலுக்கு வந்த அந்த பெண்ணிடம் தனியாக மந்திரம் செய்ய வேண்டும் என்று கூறி பள்ளிவாசலில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு பெண்ணுக்கு மந்திரம் செய்வதுபோல சிறிது நேரம் நடித்துவிட்டு பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இதனால் சுதாகரித்துக் கொண்ட பெண் கத்தி கூச்சலிட்டதால் எங்கு மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து போன அப்துல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.
இருந்தாலும் பெண் கூச்சலிடுவதை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த அவர் பெண்ணின் கழுத்து மற்றும் கையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த இளம் பெண் வலி தாங்க முடியாமல் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேசமயம் தப்பியைச் செல்ல முயன்ற அப்துலை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…