தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக முன்னணி நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தாவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென தனி பாதையை உருவாக்கி அதில் பயணித்தவர் MGR.
MGR படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR .
எம்ஜிஆர் கருணை உள்ளம் கொண்டவர் வாரி வழங்கும் வள்ளல். அதேபோல் அவருக்கு கோபம் அதிகமாக வரும். யாராவது தவறு செய்து விட்டால் அதுவும் தெரிந்து செய்து விட்டால் அவர் விடவே மாட்டார். அதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அது என்னவென்றால் எம்ஜிஆரின் உறவினர் ஒருவர் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அதிக அளவில் பணத்தை கையாடல் செய்து விட்டார். இது அறிந்த வங்கி தலைமையாளர்கள் எம்ஜிஆரின் உறவினர் ஆயிற்றே என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது எம்ஜிஆர் இடமே முறையிடலாம் என்று முடிவு செய்கின்றனர்.
அப்போது எம்ஜிஆர் இடம் சென்று நடத்தையெல்லாம் கூறினர் வங்கி தலைமையாளர்கள். உடனே அந்த உறவினரை அழைத்த எம்.ஜி.ஆர் அவரிடம் தவறு செய்தீர்களா என்று கேட்டார். ஆமாம் என்று அந்த உறவினர் கூறிய உடனே தன் பெல்டை கழட்டி அவரை அடித்து விளாசினார். பின்னர் அவர் கையால் செய்த பணத்தை வட்டியுடன் சேர்த்து எம்ஜிஆர் வங்கிக்கு திருப்பி கொடுத்தார். அது போல தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்கவே மாட்டார் எம்ஜிஆர்.