Connect with us

CINEMA

எம்.ஜி.ஆர் அணிந்திருக்கும் வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி.. அதன் பின்னணி ரகசியம் என்னவென்று தெரியுமா..?

புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. அவரது பெயர் சொன்னாலே அவரது புகழ், பெருமை எல்லாமே தெரிந்துவிடும். சினிமாவில் நடித்து, மக்கள் மனங்களில் இடம்பிடித்து, தமிழகத்தையே 11 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தவர். அமெரிக்காவில், மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவர். பொன்மனச் செல்வன் என அழைக்கப்படுபவர்.

MGR

   

எம்ஜிஆர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அவரது தொப்பியும், கருப்பு நிற கண் கண்ணாடியும்தான். படங்களில் நடிக்க துவங்கிய ஆரம்ப காலகட்டத்தில், எம்ஜிஆர் தொப்பி அணிந்திருப்பார். அல்லது முண்டாசு கட்டிக்கொள்வது வழக்கம். தனது பாகவதர் கிராப்பை காட்ட மாட்டார். அதே போல், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு வெள்ளை தொப்பி, கண்ணாடி அணியாத எம்ஜிஆரை எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் காண முடியாது. அப்படிப்பட்ட புகைப்படங்களே இல்லை.

 

ஒருமுறை, எம்ஜிஆரின் அபிமானி ஒருவர் தன் மகளுடன் எம்ஜிஆரை காண வந்திருக்கிறார். அவரது மகளுக்கு எம்ஜிஆர் மீது கொள்ளை பிரியம். கண்ணாடி, தொப்பி அணியாத எம்ஜிஆரை அவர் கண்டுகொள்ளவில்லை. தொப்பி அணிந்த பிறகுதான் அச்சிறுமி எம்ஜிஆரை கட்டிக்கொண்டு சிரித்தாராம். இந்த ரசகுல்லா தொப்பி, எம்ஜிஆர் 1974ம் ஆண்டில், ஜெய்ப்பூரில் அடிமைப்பெண் ஷூட்டிங்கில் இருந்த போது ரசிகர் ஒருவர் அன்பளிப்பாக தந்தது.

MGR

செம்மறியாட்டு ரோமங்களால் நெய்யப்பட்ட, 3 கேன்வாஸ் சீட்டுகள் கொண்ட காற்று தலைக்கு உள்ளே செல்லும் வகையிலான அந்த மாடல் தொப்பிகளை எம்ஜிஆர் இறுதி வரை அணிந்துகொண்டே இருந்தார். அதே போல், அந்த கண்களை சுற்றி சுருக்கத்தை மறைக்கும் கருப்பு கண்ணாடியும் அவரது அடையாளமாகி விட்டது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top