பிரபல படத்தின் 20 நிமிட காட்சி…! சிவாஜியின் நடிப்பை கண்டு மெய் சிலிர்த்து போன எம்.ஜி.ஆர்…. தயாரிப்பாளரிடம் சொன்ன வார்த்தை…!!

By Devi Ramu on கார்த்திகை 13, 2025

Spread the love

திரைத்துறையில் நடிகர் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் ஒரே காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாகப் பிரகாசித்தனர். இருவருக்கும் சம அளவு ரசிகர்கள் கூட்டம் இருந்ததால், ஆரோக்கியமான தொழில்முறைப் போட்டி நிலவியது. எம்.ஜி.ஆர் நடித்த ‘வசந்த மாளிகை’ போன்ற படங்கள் மறக்க முடியாதவை. அதேபோல, சிவாஜியின் சிறப்பான படங்களின் பட்டியலில் 1983-ல் வெளியான ‘மிருதங்க சக்கரவர்த்தி’யும் இடம்பெறும்.

அந்தப் படத்தில் ஒரு காட்சியில், சிவாஜி கிட்டதட்ட 20 நிமிடங்கள் தொடர்ந்து மிருதங்கம் வாசிக்கும் நடிப்பு பிரமிக்க வைக்கும். இந்தத் திரைப்படம், அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்காகத் திரையிடப்பட்டபோது, தொழில் போட்டியாளரான சிவாஜியின் நடிப்பை அவர் காண நேர்ந்தது.

   

தொடர்ந்து 20 நிமிடங்கள் நீடித்த அந்த மிருதங்கம் வாசிக்கும் காட்சியில், சிவாஜியின் உடல்மொழி, முகபாவங்கள் மற்றும் நடிப்பின் நுணுக்கங்களைக் கண்டு எம்.ஜி.ஆர் முற்றிலும் மெய்மறந்து போனார். படம் முடிந்த பிறகும், அவரது மனைவி ஜானகி எழுப்பியும் அவர் எழவில்லை.

   

சுமார் ஐந்து நிமிடங்கள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு திரையையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாராம். பின்னர், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலை ஞானத்திடம், “இந்த உலகத்தில் நடிகன் என்று ஒருவன் இருக்கிறான் என்றால், அது சிவாஜி கணேசன் மட்டும்தான் என்று போய்ச் சொல்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.