தென்னிந்தியாவில் அதிக திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் என்று பார்த்தால் அது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தான். இதன் நிறுவனத்தின் அதிபராக டி ஆர் சுந்தரம் இருந்த நிலையில் வெளிநாட்டில் கல்வி பயின்றவர் பல்வேறு புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். அவர் குறித்து முதலாளி என்ற ஒரு புத்தகம் வெளியாகி இருந்தது. வெங்கடாசாமி என்ற பத்திரிகையாளர் அந்த புத்தகத்தை எழுதி இருந்த நிலையில் இவருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் டி.ஆர் சுந்தரம் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அவர் எழுதியுள்ளார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் தான் அலிபாபாவும் 40 திருடர்களும். அன்றைய சூழலில் ஒரு பாடல் காட்சி மற்றும் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினால் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்ற சூழல் இருந்தது. ஆனால் அப்போது படப்பிடிப்புக்கு எம்ஜிஆர் வரவில்லை என்று கூறப்படுகிறது. அந்த சமயத்தில் கதாநாயகன் வரவில்லை என்பதால் படப்பிடிப்பை தள்ளி வைத்து விடலாம் என்று அனைவரும் நினைக்க டி ஆர் சுந்தரம் அவ்வாறு செய்யவில்லை. மாடல் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய முத்து என்ற ஒரு நடிகரை எம்ஜிஆருக்கு பதிலாக டூப்பாக பயன்படுத்தி அந்த படப்பிடிப்பை முடித்துள்ளார்.
பிறகு சில நாட்கள் கழித்து டி ஆர் சுந்தரத்தை காண்பதற்கு எம்ஜிஆர் வந்திருந்த போது சில காரணங்களால் தன்னால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். உடனே டி ஆர் சுந்தரம் பரவாயில்லை விடுங்க படத்த ஒருமுறை பார்த்துட்டு சொல்லுங்க என்ற எம்ஜிஆர் இடம் கூறியுள்ளார். படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார். ஏனென்றால் அந்த காட்சியில் மற்றொரு நபர் தான் நடித்துள்ளார் என்பதை எம்ஜிஆரால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அதனை அவர் படமாக்கியுள்ளார். இந்த தகவல் தான் அந்த புத்தகத்தில் இடம் பெற்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…
அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை…
அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…
திமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை, அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு…