தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து அனைத்து திரைப்படங்களிலும் ஹிட் கொடுத்தவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த். அதன் பிறகு அனைவருடைய பார்வையும் இவர் பக்கம்தான் திரும்பியது. ஆனால் ஒரு கட்டத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியை தழுவிய நிலையில் சினிமா வாய்ப்பு இல்லாமல் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீகாந்த் தந்தை ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணியாற்றி வந்தார். அம்மா கும்பகோணம் சேர்ந்தவர். ஸ்ரீகாந்த் குடும்பம் திருச்சியை சேர்ந்தது. ஸ்ரீகாந்துக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார்.
ஆனால் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு டெங்கு காய்ச்சலால் அவர் உயிரிழந்து விட்டார். தெலுங்கு சினிமாவிலும் ஸ்ரீகாந்த் என்ற பெயரில் பிரபலமான நடிகர் ஒருவர் இருக்கும் நிலையில் தனது பெயரை தெலுங்கு சினிமாவில் ஸ்ரீராம் என பயன்படுத்திக் கொண்டார். ஸ்ரீகாந்த் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக மாடலிங் செய்து கொண்டிருந்த நிலையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் 2000 ஆம் ஆண்டில் உதவி இயக்குனர்களாக இருந்த வெற்றிமாறன் மற்றும் மிஸ்கின் ஆகியோரால் நடிப்பு பயிற்சி பெற்றார். தொடர்ந்து கதிரின் காதல் வைரஸ் படத்தில் ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.
அதற்காக இவர் தன்னை ஒரு வருடம் தயார் படுத்திக் கொண்ட நிலையில் திடீரென்று அவருக்கு பதிலாக மற்றொரு புதுமுக நடிகரை அந்த படத்தில் நடிக்க வைத்து விட்டனர். தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ரோஜா கூட்டம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த தன்னை யார் என அவர் சினிமா உலகிற்கு நிரூபித்து காட்டினார். பிறகு இவர் நடித்த ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கலக்கினார். 2018 மற்றும் 2020 ஆண்டுகளில் இவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார். ஆனால் படம் ஹிட் கொடுப்பதில்லை. பெரும்பாலும் ஒரு படத்திற்கு 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய நிகர சொத்து மதிப்பு 15 கோடி வரை இருக்கும் எனவும் தெரிகிறது. இதனைத் தவிர இவ்வாறு சில கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். ஸ்ரீகாந்த் திருமணத்திற்கு பின் அவ்வளவு பெரிதாக நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த ஸ்ரீகாந்த் நேற்று போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி சினிமாவுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…
கேரேஜை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண அன்றாடப் பயணம், ஒரு நொடியில் மிகக் கொடூரமான "கனவாக" மாறும் என்று 25…