MGR

ஒரு லட்சம் ரூபாய் விவகாரத்தில் MGR-ஐ சுட்டாரா M R. ராதா..? அன்று ராமாவரம் தோட்டத்தில் நடந்தது என்ன..? இதுவரை விலகாத மர்மம்..

By admin on மார்கழி 13, 2023

Spread the love

எம்ஜிஆரை எம்ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட விஷயம் இன்றுவரை தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாகவே இருக்கிறது. எம்ஜிஆரை பொருத்த வரை, தமிழ் சினிமாவில் ஹீரோ என்ற தனது இமேஜை மட்டம் தட்டி பேசினால் பிடிக்காது. அதே போல் எம்ஜிஆர் நடிக்கும் தனது படம் அவர் விரும்பியது போல அமைய வேண்டும். இந்த இரண்டு விஷயத்திலும் எம்ஜிஆர் காம்ப்ரமைஸ் செய்துக்கொள்ளவே மாட்டார். அதேபோல் எம்ஆர் ராதா, தனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை யார் செய்தாலும் உடனே தனது எதிர்ப்பை தெரிவித்து பேசி விடுவார். அதன் பின்விளைவுகளை யோசிக்கவே மாட்டார். இதுதான் எம்ஜிஆர், எம்ஆர் ராதாவின் குணங்களாக இருந்துள்ளன.

MGR

#image_title

இருவரும் பிஸியாக நடித்த காலகட்டத்தில் சபாஷ் மாப்பிள்ளை என்ற பட போஸ்டரில் எம்ஜிஆர் அளிக்கும் சபாஷ் மாப்பிள்ளை என குறிப்பிட்டதை, எம்ஆர் ராதா, எம்ஜிஆருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சென்னையில் மட்டுமே படத்தை நீ விநியோகம் செய்யும்போது, தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் அளிக்கும் என எப்படி சொல்ல முடியும் என்று அதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். அடுத்து ஒரு படத்தில் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று டயலாக் பேச வேண்டிய இடத்தில், தொழிலாளர்களின் உதய சூரியன் என எம்ஜிஆர் திமுகவுக்கு ஆதரவாக பேசியதையும் எம்ஆர் ராதா கண்டித்துள்ளார். இப்படி அவர்களுக்குள் மோதல் போக்கு வளர்ந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தில் இருவரும் எதிரெதிர் தரப்புகளுக்கு ஆதரவாக பேச வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

   
   
MGR

#image_title

 

இப்படிப்பட்ட ஒரு சூழலில், பெற்றால்தான் பிள்ளையா என்ற எம்ஜிஆர் நடித்த படத்தை வாசு என்பவர் தயாரிக்கிறார். போதிய பணம் இல்லாததால் படம் பாதியில் நின்றுபோகிறது. அப்போது வாசு, தனது நண்பர் எம்ஆர் ராதாவிடம் கடன் கேட்க, அவர் தனது சொத்தை அடமானம் வைத்து ஆலந்தூர் சேட் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக, தயாரிப்பாளர் வாசுவுக்கு கொடுக்கிறார். இதையறிந்த எம்ஜிஆர் அந்த பணத்தை நான் தந்துவிடுகிறேன் என்று கூறி எம்ஆர் ராதாவை அலைக்கழிக்கிறார். பலமுறை அவருக்கு தருவதாக கூறியும் தராமல் இருந்துள்ளார்.

MGR

#image_title

இந்த பண விஷயம் குறித்து பேச ராமாவரம் தோட்டத்துக்கு தயாரிப்பாளர் வாசு, எம்ஆர் ராதா சென்றுள்ளனர். அப்போதுதான் மூவரும் இதுபற்றி அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது, எழுந்து நடந்துக்கொண்டே பேசிய எம்ஆர் ராதா, இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து எம்ஜிஆர் கழுத்தில் சுட்டிருக்கிறார். தொண்டை பகுதியில் குண்டடிபட்ட எம்ஜிஆர் ரத்தம் சிறந்திய நிலையை பார்த்து பயந்துபோன எம்ஆர் ராதா, அதே துப்பாக்கியால் தனது தலை மற்றும் கழுத்து பகுதியில் இரண்டுமுறை சுட்டிருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த எம்ஜிஆர், தயாரிப்பாளர் வாசுவிடம் அண்ணனை கொஞ்சம் பாருங்க என்று கூறியிருக்கிறார். அப்படி ஒரு லட்சம் ரூபாய் விவகாரம், எம்ஜிஆரையே சுடும் ஒரு மோசமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.