Connect with us

CINEMA

எம்.ஜி.ஆர் – விஜயகாந்த் இறப்பில் இருக்கும் ஒரு ஒற்றுமை.. விஜயகாந்தை கருப்பு MGR-னு சரியாத்தான் சொல்லிருக்காங்க..

தமிழகத்தையே தனது நடிப்பால் கட்டிப்போட்ட பெருமைக்குரியவர் நடிகர் விஜயகாந்த். இன்று அவர் தனது 71 வது  வயதில்  இம்மண்ணுலகை விட்டு புரிந்துள்ளார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்தவர்.  அழகர்சாமி என்ற ரைஸ்மில் முதலாளியின் மகனான இவர் படிப்பில் ஆர்வம் காட்டாமல், தொடக்கம் முதலே திரையரங்குக்கு சென்று எம்.ஜி.ஆர் படங்களை பார்ப்பதையே வழக்கமாக கொண்டவர்.

   

தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான அவர்  சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்து சேர்ந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தனது இடைவிடாத முயற்சியால் திரையுலகில் கால் பதித்து கலக்கினார். தனது வாழ்நாளில் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்த இவர்  1984ல்  மட்டும் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை வேறந்த நடிகரும் செய்ததில்லை. திரையுலகில் கலக்கிய இவர் 2005ல் ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி சினிமாவுக்கு குட்-பை சொல்லிவிட்டார்.

MGR

அதன்பிறகு மக்கள் பணியில் ஈடுபட்ட அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து தமிழக மக்களின் நெஞ்சில் கேப்டனாக சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார். இன்று கொரோனா தொற்று காரணமாக நம்மை விட்டு பிரிந்து நடிகர் விஜயகாந்த் பிரிந்துள்ளார்.  நடிகர் விஜயகாந்த் இறந்த நாளான இன்று டிசம்பர் 28, மார்கழி 12,  வியாழக்கிழமை. இதே மாதத்தில்தான் நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் மரணமடைந்துள்ளார்.

எம்ஜிஆர் இறந்தது டிசம்பர் 24, மார்கழி 9 , வியாழக்கிழமை.  எம்ஜிஆர் நினைவு நாளின் போது ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் உதவிகளை செய்து வந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். மேலும் மக்கள் விஜயகாந்தை ‘கருப்பு எம்ஜிஆர்’ என்றுதான் அழைத்தார்கள். இப்படி எம்ஜிஆரை தீவிர ரசிகரான விஜயகாந்த், தற்பொழுது எம்ஜிஆர் இறந்த அதே மாதம், அதே நாளில் இறந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இறப்பிலும் கூட இப்படி ஒரு ஒற்றுமையா..?  என்று ரசிகர்கள் தற்பொழுது கூறி வருகின்றனர.

Continue Reading

More in CINEMA

To Top