Categories: சினிமா

மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொண்டு வந்த துணை நடிகரை பல மணி நேரம் காக்க வைத்த எம்ஜிஆர்.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு கதறி அழுத நடிகர்..!

Spread the love

இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி  நாட்டியவர் தான் எம்ஜிஆர். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கண்டும் காணாமலும் பலருக்கும் எம்ஜிஆர் பலவிதமான உதவிகளை செய்துள்ளார். அப்படி ஒரு நாள் எம்ஜிஆர் உடன் ஆரம்ப காலகட்டத்தில் உடன்நடித்த ஒரு துணை நடிகர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் வழங்க எம்ஜிஆர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் எம்ஜிஆர் அழைப்பிதழை பெற்றுக் கொள்ளாமல் அந்த நபரை பல மணி நேரம் வீட்டிலேயே அமர வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அழைப்பிதழ் வழங்க வந்த அந்த நடிகருக்கு ஒரே அவமானம் ஆகிவிட்டது. எம்ஜிஆர் தன்னை அவமானப்படுத்துகிறார் என்ற சங்கடத்துடன் அங்கிருந்து கிளம்ப தயாரானார். அப்போது படியிலிருந்து இறங்கி வந்த எம் ஜி ஆர் அந்த நபரை அழைத்து நீங்கள் ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம், நண்பரே நீங்கள் உங்கள் மகளின் திருமணத்திற்காக அழைப்புகள் கொண்டு வந்திருக்கிறீர்கள், ஆனால் நானும் பிள்ளை குட்டி இல்லாதவன். என்னுடைய கையில் திருமண அழைப்பிதழ் வாங்கினால் நன்றாக இருக்குமா இல்லையா என்று எனக்கு தெரியாது.

இன்னும் சற்று நேரத்தில் என்னுடைய அண்ணன் சக்கரபாணி வருவார் அவரிடம் இந்த அழைப்புகளை கொடுங்கள், கண்டிப்பாக நான் உங்கள் மகளின் திருமணத்திற்கு வருவேன் என்று அரவணைப்போடு எம்ஜிஆர் கூறியுள்ளார். அண்ணன் வந்ததும் பத்திரிக்கையை கொடுத்த அந்த நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயை தாம்பூலத்தில் வைத்து மகளின் திருமணத்திற்காக எம்ஜிஆர் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அழைப்பிதழை கொண்டு வந்த அந்த நபர் எம்ஜிஆரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இத்தகைய நல்லெண்ணம் கொண்டதால் தான் எம்ஜிஆர் மறைந்த பிறகும் இன்றும் பலரின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Nanthini

Recent Posts

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

2 minutes ago

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

14 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

16 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

21 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

25 minutes ago