தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் MGR.

MGRரின் படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியா MGR நடிக்கும்போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக சிறப்பாக ஆட்சி நடத்தினார். தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராக இருந்து மறைந்தார் எம் ஜி ஆர்.
MGR மிகவும் நல்ல குணம் கொண்டவர். உதவி மனப்பான்மை கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல். இதுதான் அனைவருக்கும் தெரிந்தது. இதையும் தாண்டி எம்ஜிஆர் மிகவும் காமெடி செய்யக்கூடியவர் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆம் அது அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிப்பதற்காக எம்ஜிஆர் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது வாலி எம்ஜிஆரை தேடி வந்தாராம். உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக பாடல் எழுத நீங்க எதுவுமே சொல்லலையே என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் நீங்கள் ஒன்னும் இந்த படத்துக்கு பாடல் எழுத வேண்டாம் கண்ணதாசன் தான் எழுத போகிறார் என்று கூறியிருக்கிறார்.

உடனே சற்று கோவப்பட்ட வாலி நான் பாடல் எழுதாமல் என் பெயர் படத்தில் இடம் பெறாமல் உங்கள் படம் ரிலீஸ் ஆகி விடுமா எப்படி ஆகும் என்று பார்க்கிறேன் என்று சவால் விடும் விதமாக பேசி இருக்கிறார். உடனே எம்ஜிஆர் ஆமா உங்கள் பெயரை படத்திலிருந்து தூக்கி விட்டால் உலகம் சுற்றும் பன் என்று ஆகிவிடுமே என்ற காமெடியாக பேசி இருக்கிறார். உடனே சிரித்துவிட்ட வாலி அமைதியாக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் கூறி உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு வாலி புலமைப்பித்தன் கண்ணதாசன் ஆகிய மூன்று பேரும் பாடலை எழுதியிருக்கின்றனர்.
