அரசியலுக்காக சினிமாவை கைவிடுவதாக சொன்ன தளபதி.. அதற்கு நேர் எதிராக அப்பவே எம்ஜிஆர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

By Mahalakshmi on ஜூன் 29, 2024

Spread the love

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளதால் சினிமாவை கைவிடுவதாக கூறி இருந்த நிலையில் அதற்கு நேர் எதிராக அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் அரசியலில் கால்பதித்த போது சொன்ன ஒரு விஷயத்தைப் பற்றி தான் இந்த தகவலில் நாம் பார்க்க போகிறோம்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். இந்த கட்சியின் சார்பாக வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசியலில் களமிறங்கி இருக்கின்றார். இதனால் சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

   

   

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிட்ட திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆனால் இன்னும் அவரின் அடுத்த திரைப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

இதற்கு இடையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி நேற்று கௌரவப்படுத்தி இருந்தார் நடிகர் விஜய். அடுத்ததாக இரண்டாவது கட்டமாக மீதம் உள்ள தொகுதி மாணவர்களுக்கு வருகிற ஜூலை மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமும் அரசியலில் குதிக்க உள்ள நிலையில் இது அவரது ரசிகர்களுக்கு சற்று சோகத்தை கொடுத்திருக்கின்றது.

இருப்பினும் அவர் தமிழகத்தின் முதல்வராக வந்து நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்நிலையில் எம்ஜிஆர் அந்த காலத்தில் சினிமாவை விட்டுவிட்டு அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்ட போது எடுத்த ஒரு முடிவை பற்றி தான் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார். அதாவது நடிகர் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் சினிமாவில் இனி நடிக்க முடியாது என எண்ணி வருத்தப்பட்டு இருக்கின்றார்.

அப்போது பல பிரபலங்களும் நீங்கள் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதாவது நீங்கள் சினிமாவில் தங்களது பாடல்கள் மூலமாகவும், படத்தின் மூலமாகவும் பல நல்ல விஷயங்களை கூறியிருந்தார்கள். இனி யார் அது போன்று நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்து கூறுவார்கள் என அனைவரும் கேட்டு இருக்கிறார்கள். இதனால் அவர் ஒரு முடிவு எடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது இனிமேல் நான் பாதி நாட்கள் முதலமைச்சராகவும் பாதி நாட்கள் சினிமாவிலும் நடிக்கப் போகிறேன் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவரை அழைத்து நீங்கள் சினிமாவில் நடிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் முதலமைச்சருக்கு என சில பொறுப்புகள் இருக்கின்றது.

நீங்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் பதவியில் வேறு யாரையாவது அமர வைத்துவிட்டு தாராளமாக சினிமாவில் நடியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட எம்ஜிஆர் உடனே பத்திரிகை நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி இருக்கின்றார். உடனே இந்த செய்தி அனைத்தையும் நிறுத்துங்கள் என்று ஆனால் அதற்கு முன்னதாகவே தினத்தந்தி செய்தி நிறுவனம் பத்திரிக்கையை அடித்து அனைவருக்கும் விநியோகம் செய்துவிட்டது. அந்த நாளில் இந்த செய்தியானது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.