90’S காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் மும்தாஜ். இவர் டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்ற படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு குஷி, லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
கடந்த 2007- ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வீராசாமி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மும்தாஜ் ஹீரோயினாக நடித்தார். டி. ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, இசை, பாடல், பாடகர், நடிப்பு என பன்முக திறமை கொண்டவர். டி.ராஜேந்திரை பொறுத்த வரை எதையும் தைரியமாக பேச கூடிய நபர்.
சமீபத்தில் நடிகர் பாவா லட்சுமணன் வீராசாமி பட ஷூட்டிங் நடந்த சம்பவம் பற்றி பேசியுள்ளார். பாவா லட்சுமணன் கூறியதாவது, டி.ராஜேந்தர் தைரியமான நபர். வீராசாமி பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. ஹீரோயினாக மும்தாஜ் நடித்தார். ஒரு முறை மும்தாஜ் இந்த சீனை மட்டும் மறுபடியும் எடுக்கலாம் என கூறினார்.
உடனே டி.ராஜேந்தர் யாருமா நீ? பாம்பேல குரூப் டான்ஸ் ஆடிட்டு இருந்த பொண்ணு. உன்ன கூட்டிட்டு வந்து நான் ஹீரோயினா அறிமுகப்படுத்தினேன். திருப்பி இங்க எல்லாரையும் கட்டிப்பிடித்து நீ டான்ஸ் ஆடின. திரும்பவும் நான் உன்ன இங்க கொண்டு வந்து ஹீரோயினா ஆக்கி இருக்கேன். ஒழுங்கா நடிச்சிட்டு போமா என டி.ராஜேந்தர் கூறியதாக பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.