#image_title
பாரத் ரத்னா விருது பெற்ற எம் எஸ் சுப்புலட்சுமி 1916 ஆம் ஆண்டு மதுரையில் சண்முகவடிவு மற்றும் சுப்பிரமணிய ஐயருக்கு மகளாக பிறந்தார். பாரம்பரியமான இசை குடும்பத்தில் பிறந்த அவரும் சிறு வயது முதலே இசையைக் கற்றுக்கொண்டார்.
வீணைக் கலைஞரான சண்முகவடிவு தனது மகளுக்கு தானே இசையைக் கற்றுக் கொடுத்துள்ளார். ஒரு முறை சண்முகவடிவுவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யும் போது அப்போது 10 வயதில் இருந்த சுப்புலட்சுமியின் குரலையும் சேர்த்து பதிவு செய்துள்ளார்கள். இந்த பாடல் அப்போது பிரபலமாகியுள்ளது. கேட்டவரெல்லாம் அவர் குரலில் மயங்கியுள்ளனர்.
இதன் பின்னர் 1926ம் ஆண்டு “மரகத வடிவும் செங்கதிர் வேலும்” எனும் பாடலை தாயார் சண்முகவடிவின் வீணை இசையோடு இணைந்து பாடினார் எம் எஸ். இதுவே அவரின் முதலாவது இசைத்தட்டு வெளியீடாகும். இவர குரல் நாளுக்கு நாள் பிரபலம் ஆக சேவாதனம் எனும் படத்தில் முதல் முதலில் அவரை கதாநாயகி ஆக்கி பாடவைத்தனர்.
அதன் பின்னர் அவர் நடித்த சகுந்தலை திரைப்படம் அவரை மேலும் பிரபலமடையச் செய்தது. எல்லாவற்றுக்கும் உச்சம் வைத்தது போல 1945 ல் வந்த மீரா திரைப்படம் அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற காற்றினிலே வரும் கீதம் பாடல் அகில இந்தியாவையும் கலக்கியது. இந்த பாடல் மூலம் காங்கிரஸ் தலைவர் நேருவுக்கு மிகவும் பிடித்த பாடகியானார்.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைய பாடல்கள் பாடி வந்தார் எம் எஸ். குடும்பத்தில் சொத்து பிரித்த போது அவர்கள் வசித்துவந்த வீடு அவர்கள் கையை விட்டு போயுள்ளது. இதனால் வசிக்க வீடில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் எம் எஸ்.
இதை அப்போது முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் அறிந்த “இந்தியாவையே தன் குரலால் நெகிழ வைத்த எம் எஸ் சுப்புலட்சுமிக்கு வீடில்லையா.” என அதிர்ச்சியாகி உடனடியாக தன் அமைச்சர் ஒருவர் மூலம் ஒரே நாளில் அவருக்கு பிடித்தது போல வீடு பார்த்து வாங்கி தரவேண்டும் என உத்தரவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டுக்கான பணத்தை தன் சொந்த சேமிப்பில் இருந்து கொடுத்தாராம்.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…