காற்றினிலே வரும் கீதமாக அகில இந்தியாவையும் உருக வைத்த எம் எஸ் சுப்புலட்சுமியின் குரல்- அவருக்கா இப்படி ஒரு நிலை என அதிர்ச்சியான எம் ஜி ஆர்!

By vinoth on மாசி 22, 2024

Spread the love

பாரத் ரத்னா விருது பெற்ற எம் எஸ் சுப்புலட்சுமி 1916 ஆம் ஆண்டு மதுரையில் சண்முகவடிவு மற்றும் சுப்பிரமணிய ஐயருக்கு மகளாக பிறந்தார். பாரம்பரியமான இசை குடும்பத்தில் பிறந்த அவரும் சிறு வயது முதலே இசையைக் கற்றுக்கொண்டார்.

வீணைக் கலைஞரான சண்முகவடிவு தனது மகளுக்கு தானே இசையைக் கற்றுக் கொடுத்துள்ளார். ஒரு முறை சண்முகவடிவுவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யும் போது அப்போது 10 வயதில் இருந்த சுப்புலட்சுமியின் குரலையும் சேர்த்து பதிவு செய்துள்ளார்கள். இந்த பாடல் அப்போது பிரபலமாகியுள்ளது. கேட்டவரெல்லாம் அவர் குரலில் மயங்கியுள்ளனர்.

   

இதன் பின்னர் 1926ம் ஆண்டு “மரகத வடிவும் செங்கதிர் வேலும்” எனும் பாடலை தாயார் சண்முகவடிவின் வீணை இசையோடு இணைந்து பாடினார் எம் எஸ். இதுவே அவரின் முதலாவது இசைத்தட்டு வெளியீடாகும். இவர குரல் நாளுக்கு நாள் பிரபலம் ஆக சேவாதனம் எனும் படத்தில் முதல் முதலில் அவரை கதாநாயகி ஆக்கி பாடவைத்தனர்.

   

அதன் பின்னர் அவர் நடித்த சகுந்தலை திரைப்படம் அவரை மேலும் பிரபலமடையச் செய்தது. எல்லாவற்றுக்கும் உச்சம் வைத்தது போல 1945 ல் வந்த மீரா திரைப்படம் அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற காற்றினிலே வரும் கீதம் பாடல் அகில இந்தியாவையும் கலக்கியது. இந்த பாடல் மூலம் காங்கிரஸ் தலைவர் நேருவுக்கு மிகவும் பிடித்த பாடகியானார்.

 

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைய பாடல்கள் பாடி வந்தார் எம் எஸ். குடும்பத்தில் சொத்து பிரித்த போது அவர்கள் வசித்துவந்த வீடு அவர்கள் கையை விட்டு போயுள்ளது. இதனால் வசிக்க வீடில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் எம் எஸ்.

இதை அப்போது முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் அறிந்த “இந்தியாவையே தன் குரலால் நெகிழ வைத்த எம் எஸ் சுப்புலட்சுமிக்கு வீடில்லையா.” என அதிர்ச்சியாகி உடனடியாக தன் அமைச்சர் ஒருவர் மூலம் ஒரே நாளில் அவருக்கு பிடித்தது போல வீடு பார்த்து வாங்கி தரவேண்டும் என உத்தரவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டுக்கான பணத்தை தன் சொந்த சேமிப்பில் இருந்து கொடுத்தாராம்.