MGR தமிழ் சினிமாவில் பணியாற்றிய புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரை யாராலும் எளிதாக மறந்துவிட முடியாது. இன்றைய நடிகர்களுக்கு ரோல் மாடலாக இருந்தவர் MGR. நடிகராக மட்டுமில்லாமல் தமிழகத்தின் முதலமைச்சராகவும் சிறப்பாக ஆட்சி செய்தவர் MGR. இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம்.
தமிழக மக்கள் MGR மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். அவர் இருக்கும் வரையிலும் படுக்கையில் இருந்தாலும் கூட அவரை தேர்தலில் ஜெயிக்க வைத்து முதலமைச்சர் ஆக்கினர் மக்கள். குடும்ப வறுமைக்காக நாடகக் குழுவில் சேர்ந்த MGR பின்னாளில் தமிழகத்தை ஆளும் ஆட்சியாளராக மாறப் போகிறார் என்பது அவர் அறிந்திருக்க மாட்டார்.
1949 இல் சினிமாவில் அறிமுகமான MGR 1950 60 70களில் புகழின் உச்சியில் இருந்தார். இவரது படங்கள் அதிரடி காட்சிகள் நிறைந்திருக்கும். சமூக நீதி கருத்துக்கள், திராவிட சிந்தனைகளை கொண்டிருக்கும். மக்களுக்கு பணி செய்யவே எப்பொழுதும் விரும்புவார் MGR .
MGR செக்கச் சிவப்பாக பிங்க் நிறத்தில் இருப்பார். இவரது நிறத்திற்கு காரணம் தினந்தோறும் MGR தங்க பஸ்பம் சாப்பிடுகிறார் அதனால் தான் இப்படி இருக்கிறார் என்று வதந்திகள் பரவி வந்தன.