தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராகவும் தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சியாளராகவும் திகழ்ந்தவர் MGR. தனக்கென தனி ராஜ்ஜியத்தையும் சிம்மாசனத்தையும் கொண்டிருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. இவர் போல் ஒரு மனிதர் இல்லை என்று அனைவரும் இன்றளவும் கூறும் அளவுக்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார் MGR.

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் துணை கதாபாத்திரங்களில் நடித்து போராடி நடிகராக உயர்ந்தவர். தானக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு பிடித்த முறையில் நல்ல நல்ல கதைகளில் நடித்து பிரபலமானார் MGR. இவரது படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்சன் காட்சிகள் இருக்கும். அதனால் மக்களை இவரை பெரிதும் ரசித்தனர்.
மக்களுக்கு பணி செய்ய விரும்பிய எம்ஜிஆர் நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆகவே இருந்து மறைந்தவர் MGR. MGR மிகவும் புத்திசாமர்த்தியம் கொண்டவர் சமயோஜத புத்தி கொண்டவர் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.
தெலுங்கு படமான ராமு பீமடு என்ற படத்தில் ரீமேக் தான் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்க வீட்டு பிள்ளை திரைப்படம். இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வாலி தான் எழுதியிருப்பார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதில் நான் ஆணையிட்டால் என்ற பாடலை எழுதியிருந்தார் வாலி. இந்த பாட்டிற்கு முதலில் நான் அரசனானால் என் ஆட்சி இருந்தால் ஏழைகள் வேதனை பட மாட்டார் என்று எழுதி இருக்கிறார் வாலி. இதை சென்சாரில் உடனே மாற்றும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் வாலி நான் எம்ஜிஆர் சொல்லாமல் எதையும் மாற்ற மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

உடனே எம்ஜிஆர் நீங்கள் மாற்றம் செய்வதை மாற்றி எழுதுங்கள் என்று ஆலோசனை கூறினார் எம்ஜிஆர். அதன்படி வாலி நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்று மாற்றினார். அதேபோல் எனக்கு ஒரு காலம் வரும் எதிர்காலம் வரும் இந்த காக்கை கூட்டத்தை ஒழிப்பேன் என்ற வரியையும் மாற்ற சொன்னார்கள். இதில் காக்கை என்பதை திமுகவை சுட்டிக்காட்டியதால் அந்த வார்த்தை மாற்றி எம்ஜிஆர் வேறொரு வார்த்தையை சொன்னார் அதன்படி எதிர் காலம் வரும் எனக்கு நேரம் வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்று எழுதி இருந்தார் வாலி. இந்த படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
