தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்தினம். மற்ற கலைஞர்களின் படைப்புகளில் சற்றே மாறுபட்டு தரமான படிப்புகள் மூலம் புதிய ட்ரெண்ட்டை ஏற்படுத்தி வெற்றி கண்டவர். ஒரு இயக்குனரின் பங்கு என்பது திரைக்கதையை எழுதி அதற்கு ஏற்றது போல நடிகர்களிடமிருந்து சிறப்பானதை காட்சிப்படுத்துவதுடன் நின்று விடாமல் அந்த காட்சியின் பிரேம் முழுக்க என்ன இருக்க வேண்டும் இருக்கக் கூடாது என்பதை அக்கறையுடன் முடிவெடுப்பதில் இயக்குனரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று புதுவித திரைப்பட உருவாக்க மூலமாக மணிரத்தினம் பார்வையாளர்களை உணர வைத்துள்ளார்.
காதல் ரொமான்ஸ் சொல்லிட்டா கதைகளுக்கு பெயர் போனவர் மணிரத்தினம் என்றாலும் தீவிரவாதம், மதகலவரம் மற்றும் சமூக பிரச்சனை குறித்த திரைக்கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் அதன் ஆழத்திற்கு சென்று கருத்து சொல்லும் அளவுக்கு தன்னுடைய படைப்புகளை அமைப்பதில்லை. என்றுமே தன்னை அனைவரும் விரும்பத்தக்க வகையில் இயக்குனராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பலரும் கனவு கண்ட ஒரு கனவு ப்ராஜெக்ட் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நினைவாகிய தமிழ் சினிமாவை சர்வதேச அளவில் பெருமைப்படுத்தினார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு பிசியான இயக்குனராக உள்ளார். இந்த நிலையில் 1986 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயற்றிய திரைப்படம் தான் மௌன ராகம். இந்த படத்தில் ரேவதி மற்றும் மோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
பழைய காதல் நினைவுகள் மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களை பேசிய மௌன ராகம் திரைப்படம் இன்றும் பலர் விரும்பும் திரைப்படமாக உள்ளது. இந்த நிலையில் மௌன ராகம் திரைப்படம் குறித்து மணிரத்தினம் சமீபத்தில் அளித்த பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், மௌன ராகம் படத்தை பார்க்க சிட்டியில் இருந்து வெளியே சென்று ஒரு திரையரங்கில் பார்த்தேன். அதுக்கப்புறம் தியேட்டர் போறதையே நிறுத்திட்டேன். தியேட்டருக்கு போனதும் ஃபர்ஸ்ட் 10 ரோ காலியா இருந்துச்சு. பிறகு அமைதியா உட்கார்ந்து படத்தை பார்த்து முடிச்சுட்டு வெளியே வந்ததும் எல்லாரும் வெளியில வராங்க.
அப்போ ஒரு ஆளு வேட்டிய மடிச்சு கட்டிட்டு வந்து, என்னடா இது அந்த பொண்ணு நாலு அடி போட்டு இருந்தா எல்லாம் சரியாகி இருக்கும் என்று அவர் சொன்னதும் என்னை இப்படி சொல்லிட்டாங்கன்னு எனக்கு தோணுச்சு. படத்த ஒரு லைன்ல முடிச்சிட்டாங்க. அவங்க பக்கம் இருந்து நான் யோசித்துப் பார்க்கவே இல்லை. அடிக்கிறது ஒரு பிரச்சனைக்கு தீர்வாய் இருக்காது என்பதை நான் அந்த இடத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும். என் பக்கம் இருந்து மட்டும் யோசித்து அந்த படத்தை எடுத்த நான் மக்கள் பக்கம் என்ன யோசிப்பாங்க என்று நினைக்காமல் அந்த படத்தை எடுத்துட்டேன். அவங்க சொல்றது சரியோ தப்போ ஆனா அதுல இருந்து நாம சில விஷயத்தை கத்துக்கணும்னு அன்னைக்கு நான் தெரிஞ்சுகிட்டேன் என்று மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.