தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தேர்தல் களமே பரபரப்பாக மாறிவிட்டது. சமீபகாலமாகவே அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜயின் கட்சியில் தொடர்ந்து ஐக்கியம் ஆகிய வருகின்றனர். அந்தவகையில் செங்கோட்டையன் விஜய் கட்சியின் இணைந்துள்ளார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் புதிதாக தவெக கட்சி அலுவலகத்தை திறந்துள்ளார். இதற்காக வைக்கப்பட்ட பேனரில் எம்ஜிஆர், ஜெ., புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று, தனிப்பட்ட முறையில் ஜெ.,வின் போட்டோவை வைத்திருப்பதில் தவறில்லை என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால் தற்போது முன்னாள் கட்சியின் தலைவர்கள் போட்டோவை தவெக பேனரிலேயே அடித்திருப்பது 2-ம் கட்ட தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.
