mgr

Cameraman வேலையை பார்த்த MGR… கோபத்தில் இயக்குனர் செய்த செயல்…

By admin on கார்த்திகை 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் புகழ்பெற்ற நடிகராகவும் இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தனக்கென தனி இடத்தை பிடித்து தனி ராஜ்யத்தை அமைத்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் MGR.

   

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் நடிகராக உயர்ந்தவர். MGRரின் படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதனால் மக்கள் அவரை வெகுவாக ரசித்தனர்.

   

MGR படங்கள் என்றாலே ஹிட்டுதான் என்ற அளவுக்கு பேரும் புகழும் பெற்றார் எம்ஜிஆர். இருப்பினும் மக்களுக்கு பணி செய்ய விரும்பிய MGR நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனக்கென ஒரு தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக சிறப்பாக ஆட்சி நடத்தி தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர் MGR.

 

எம்ஜிஆர் எப்போதும் உதவும் மனப்பான்மை கொண்டவர். அப்படி ஒரு சம்பவம் ஒரு படத்தின் சூட்டிங்கின் போது நடந்திருக்கிறது. சக்கரவர்த்தி திருமகள் என்ற படத்தில் ஷூட்டிங்கின் போது எம்ஜிஆர் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பாடல் காட்சியின் போது ஷூட்டிங்காக அமைக்கப்பட்ட அரங்கிற்கு வந்தார். வந்ததும் அங்கு கேமரா எப்படி வைத்திருக்கிறது என்பதை பார்த்தார். பார்த்துவிட்டு கேமரா மேனை கூப்பிட்டு இந்த மாதிரி கேமரா ஆங்கிள் வைக்காதீர்கள் மேலிருந்து வையுங்கள் என்று கூறிவிட்டு மேக்கப் போட சென்றிருக்கிறார்.

இதை கவனித்த இயக்குனர் பா நீலகண்டன் மிகவும் கோபப்பட்டு இங்கு இயக்குனர் நானா அல்லது எம்ஜிஆரா அவர் சொன்னபடி கேமராவை மேலே தூக்கி வைத்தால் லைட்டிங் எல்லாம் பண்ணுவதற்கு மிகவும் நேரம் ஆகும் என்று கூறியிருக்கிறார். உடனே எவ்வளவு நேரம் ஆனாலும் நான் இருந்துவிட்டு நடித்துக் கொடுத்து விட்டு போகிறேன் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார். எம்ஜிஆர் கூறியபடி கேமராவை மேலே தூக்கி வைத்து அந்த பாடலை படமாக்கினார்கள். அந்த பாடலும் படமும் மெகா ஹிட் ஆனது. அதற்கு பிறகு எம்ஜிஆரின் குணத்தை புரிந்து கொண்ட இயக்குனர் பா நீலகண்டன் எம்ஜிஆர் இடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்படி எந்த இடத்திலும் பொறுப்போடும் உதவும் மனப்பான்மையோடும் இருப்பவர் எம்ஜிஆர்.