lemon man

எலுமிச்சை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம்… அசத்தும் உத்திரபிரதேசத்தின் Lemon Man…

By admin on கார்த்திகை 1, 2024

Spread the love

விவசாய பின்னணியில் இருந்து வந்தவர் ஆனந்த் மிஸ்ரா. பாதுகாப்பான உயர் சம்பளம் கொண்ட வேலையில் பணிபுரிந்தாலும் அவருக்கு மனதில் ஏதோ ஒரு வெறுமை இருந்து கொண்டே இருந்தது. அதனால் தனது வேலையை விட்டுவிட்டு தனது சொந்த நிலத்தில் பயிரிட போவதாக சொல்லிக் கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்தார்.

   

அவர் சொந்த நிலத்தில் கோதுமை மற்றும் நெல்லைப் பயிரிட்டார். ஆனால் அதில் எந்த ஒரு வருமானமும் அவருக்கு கிடைக்கவில்லை. ஆண்டு லாபம் வெறும் 52 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. அதனால் தனது ஊரில் இருந்த தோட்டக்கலை வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்தார். திடீரென்று அவருக்கு எலுமிச்சை சாகுபடி செய்தால் என்ன என்ற யோசனை வந்தது. இருந்தாலும் அவருக்கு எலுமிச்சை சாகுபடி செய்து அதில் வருமானம் ஈட்டுவது எப்படி என்று அவருக்கு தெரியவில்லை.

   

அதை தெரிந்து கொள்ளவே உத்தர பிரதேசம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆனந்த் மிஸ்ரா எலுமிச்சை சாகுபடி விவசாயிகளை சந்தித்து அதனால் கிடைத்த அனுபவங்களை வைத்து அவரது நிலத்தில் எலுமிச்சை சாகுபடியை தொடங்கினார்.

 

ஆரம்ப கட்டத்தில் அவர் தோல்வியை தழுவினாலும் எந்த ஒரு லாபமும் கிடைக்கா விட்டாலும் தொடர்ந்து அவர் முயற்சி செய்து கொண்டே இருந்தார். மூன்று ஆண்டுகள் உழைப்பிற்கு பிறகு நான்காம் ஆண்டு அவரது எலுமிச்சை சாகுபடி அவருக்கு கை கொடுக்க ஆரம்பித்தது. ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேல் அவர் வருமானம் ஈட்டினார். எலுமிச்சலையிலே பல விதங்களில் அவர் எலுமிச்சை சாகுபடி செய்தார்.

இதனால் அவரை மக்கள் உத்தர பிரதேசத்தின் Lemon Man என்று அழைக்க தொடங்கினர். இவர் தனது உழைப்பினால் எலுமிச்சை சாகுபடியில் ஜெயித்து விவசாயியாக மட்டுமல்லாமல் தோட்டக்கலை நிபுணர் மற்றும் ஆலோசகர் ஆகவும் இருக்கிறார்.

அவரை தேடி விவசாயத்தில் ஆர்வம் கொண்டு வரும் மாணவர்கள் ஆனாலும் சரி விவசாயத்தில் தோல்வி அடைந்தவர்களாலும் சரி தனது அனுபவத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து எலுமிச்சை சாகுபடி சவால்களையும் சொல்லிக் கொடுத்து அவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார் ஆனந்த் மிஸ்ரா. விவசாய அமைச்சர் முதல் உத்தர பிரதேச மாநிலம் விருது வரை அவர் பல விருதுகளை வென்றிருக்கிறார்.

எங்கெல்லாம் எந்த தரிசு நிலமாக இருந்தாலும் சரி அதில் எலுமிச்சை பயிரிட முடியும் என்று தனது பரிசோதனையில் கண்டுபிடித்து அதை பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார் Lemon Man ஆன ஆனந்த மிஸ்ரா எதிர்காலத்தில் இதை இன்னும் விரிவு படுத்தி வளைகுடா நாடுகளிலும் எலுமிச்சை பயிரிட முடியுமா என்பதே சோதனை செய்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.