#image_title
MGR தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத மகா நடிகர். அது மட்டும் இல்லாமல் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி நடத்திய முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் MGR ஆவார். இளமைப் பருவத்தில் குடும்ப வறுமைக்காக நாடகத்தில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த MGR 1936 இல் முதன் முதலாக தமிழ் சினிமாவில் தோன்றி அறிமுகமானார்.
1940 50 60களில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக வலம் வந்தவர் MGR. MGR, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய மூவரையும் தமிழ் சினிமாவில் மூவேந்தர் என்று அழைப்பர். அந்த அளவுக்கு பெயர் பெற்றவர் MGR .இவரது படங்கள் அதிரடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கும்.
மேலும் சமூக நீதி கருத்துக்களையும் திராவிட சிந்தனைகளையும் இவரது படங்களில் அதிகமாக காணப்படும். நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் நாட்டம் கொண்டிருந்த MGR திராவிட கட்சியில் இருந்து பணிபுரிந்து வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு தனியாக கட்சி ஆரம்பித்து அதன் மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டவர் MGR . உடம்பு சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற போதும் படுத்துக்கொண்டே முதலமைச்சராக ஜெயித்தவர் MGR . அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்டிருந்தார் MGR .
MGR அவர்களுக்கு மக்கள் சும்மா ஒன்றும் ஆதரவு தரவில்லை. அவர் மக்களின் நலனில் அந்தளவுக்கு அக்கறை எடுத்துக் கொண்டார். குறிப்பாக பெண்கள் தாய்குலத்தின் நலனுக்காக அதிகம் யோசிப்பவர் MGR .அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அது என்னவென்று என் இனி காண்போம்.
எம்ஜிஆரின் கட்சி கூட்டம் என்றால் அவரை காண்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம் கூடி விடுவர். அப்படி ஒரு கூட்டத்தில் அவர் பேசி முடிந்த பின்பு மேடையில் வைத்து பெண்கள் மட்டும் முதலில் செல்லுங்கள் ஆண்களுக்கு நான் தனியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று கூறி முதலில் பெண்களை அனுப்பி வைத்திருக்கிறார். பிறகு 10 நிமிடம் கழித்து ஆண்கள் செல்லலாம் என்று கூறினாராம். ஏன் அப்படி கூறினீர்கள் என்று மக்கள் கேட்டதற்கு இல்லை இப்போ எல்லாரையும் போக சொன்னா ஆம்பளைங்க எல்லாம் தாய்மார்களை கூட்ட நெரிசல்ல இடிச்சு தள்ளிட்டு போயிடுவீங்க. அவங்களுக்கு சிரமமா இருக்க கூடாது இல்லையா அதான் அப்படி பண்ணுன என்று கூறியிருக்கிறார் MGR .அவருடைய சாமர்த்தியத்தையும் பெண்கள் தாய்குலத்திற்கு மீதான நலனையும் கண்டு தான் தாய்குலம் போற்றும் மாமனிதராக MGR திகழ்ந்து இருக்கிறார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…