தன் வீட்டில் மூடநம்பிக்கைக்கு எதிராக MGR செய்த செயல்… வாயடைச்சு போன பணியாளர்கள்…

By Meena on செப்டம்பர் 18, 2024

Spread the love

MGR தமிழ் சினிமா மறக்க முடியாத ஒரு மகா நடிகர். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக திறம்பட பணியாற்றி தான் இறக்கும் தருவாயிலும் முதலமைச்சராகவே இருந்தவர். தன்னலமற்ற தலைவனாக திகழ்ந்தவர். மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர். மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் MGR .

   

குடும்ப வறுமை காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் அதன்மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கப்பெற்று சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்பு நடிகராக உயர்ந்தவர். இவரது படங்கள் என்றாலே அதிரடி காட்சிகள் நிறைந்திருக்கும். 1950 60 70களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் MGR. சிவாஜி கணேசன், MGR ,ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களாக கருதப்பட்டனர்.

   

MGRரின் படங்கள் சமூக நீதி கருத்துக்களையும் திராவிட சிந்தனைகளையும் அதிகமாக கொண்டிருக்கும். தான் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் ஆர்வம் கொண்டு திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றி வந்தார் MGR .ஒரு கட்டத்திற்கு பிறகு தானே கட்சி ஆரம்பித்து தேர்தலில் வெற்றி கண்டு திறம்பட ஆட்சி செய்து மக்களின் உள்ளத்தை வென்றவர் MGR .

 

ஒருநாள் MGR வீட்டில் ஒரு வினோத சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் எம்ஜிஆர் வீட்டில் கிணற்றில் ஒரு ஆமை கிடந்ததாம். அதைப் பார்த்த மணி என்ற சமையல்காரர் MGR இடம் வந்து ஐயா நம் வீட்டு கிணற்றில் ஆமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உடனே MGR அப்படின்னு அடுத்த வேலையை செய்ய போய்விட்டாராம். உடனே மணி அவரை தடுத்து ஐயா ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்லுவாங்க அதை அடித்துக் கொல் வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

எப்போதும் கடவுளை நம்பும் MGR மூடநம்பிக்கைக்கு எதிராகவே தனது வாழ்நாளில் இருந்து வந்திருக்கிறார். அப்படி மணி அந்த வார்த்தையை கூறியதும் MGR மகாவிஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரமும் கூர்மா அவதாரமும் அவரோடது தான். அப்ப ஏன் கிருஷ்ணா அவதாரத்தை மேன்மைப்படுத்தி அவருடைய ஆமை அவதாரமான கூர்ம அவதாரத்தை இப்படி கொல் சொல்றீங்க. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அதுவும் ஒரு உயிர் தானே இருந்துட்டு போகட்டும் என்று கூறினாராம் MGR. உடனே அதை கேட்டு அங்கிருந்தவர்கள் வாயைடைத்து போய் விட்டார்களாம்.