நளினி தென்னிந்தியாவில் பணியாற்றிய பிரபல நடிகை ஆவார். 1980களில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் நளினி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவரது தந்தை தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குனர் மற்றும் இவரது தாயாரும் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
1980 ஆம் ஆண்டு ஒத்தையடி பாதையிலே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நளினி. அடுத்ததாக 1982 ஆம் ஆண்டு ஓம் சக்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நளினி. பக்தி திரைப்படங்களில் இவரின் நடிப்பு மக்களால் ரசிக்கப்பட்டது. அதனால் பல பக்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நளினி.
மனைவி சொல்லே மந்திரம், சமயபுரத்தாளே சாட்சி, நான் பாடும் பாடல், நூறாவது நாள், நியாயம், எழுதாத சட்டங்கள், மண்ணுக்கேத்த பொண்ணு, நவக்கிரக நாயகி, கீதாஞ்சலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நளினி.
2000களின் பிற்பகுதியில் சின்னத்திரைக்குள் நுழைந்த நளினி பல சின்னத்திரை வெற்றி தொடர்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்கள் திரைப்படத்திலும் விருந்தினர் தோற்றத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் நளினி. 1980களில் கிராமத்து நாயனாக புகழின் உச்சியில் இருந்த ராமராஜன் அவர்களை 1987 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் நளினி. இதைப்பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் நானும் ராமராஜனும் காதலிச்சோம். எங்க வீட்ல ஒத்துக்கவே இல்ல. பயங்கர சண்டை. அப்போ ஒரு நாள் ஷூட்டிங்ல மதியம் ஒரு மணி இருக்கும் ஒரு மணி நேரம் தான் எங்க அம்மா கூட இல்ல அந்த ஒரு மணி நேரத்துல உடனே நான் கிளம்பி முகமூடி எல்லாம் போட்டுட்டு கார்ல போயி நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதற்குப் பிறகு ஒரு மாசமா நாங்க சென்னைக்கு வரவே இல்ல. ஒரு மாசம் கழிச்சு தான் வந்தோம். என் அம்மாவை கூப்பிட்டு பேசி சமரசம் செஞ்சு வச்சவரு எம்ஜிஆர் ஐயா தான். அவர்தான் எங்களுக்கு ரிசப்ஷன் எல்லாம் ஏற்பாடு பண்ணாரு என்று ரகசியங்களை உடைத்து பேசியிருக்கிறார் நளினி.