தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இருந்தவர் தான் சவுகார் ஜானகி. குறிப்பாக சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், புதிய பறவை மற்றும் பாலும் பழமும் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இவர் கொடுத்துள்ளார். எம்ஜிஆர் உடன் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார். சுமார் பத்து வருட இடைவேளைக்கு பிறகு எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. 1962 ஆம் ஆண்டு வள்ளிநாயகம் என்பவரின் தயாரிப்பில் எஸ் ஏ சுப்புராமன் இயக்கத்தில் வெளியான மாடப்புறா என்ற திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிப்பதற்கு சௌகார் ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது சவுக்கார் ஜானகி கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டிருந்ததால் படத்திலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு வெளியான பணம் படைத்தவன் என்ற படத்தில் சௌகார் ஜானகி எம்ஜிஆர் உடன் மீண்டும் இணைந்து நடித்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற பெரிய ஹிட் பாடலான கண் போன போக்கிலே பாடல் காட்சி படமாக்கப்படும்போது எம்ஜிஆர் திடீரென்று படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.
அதாவது அந்த காட்சியில் சௌகார் ஜானகி அணிந்திருந்த உடை டிரான்ஸ்பரண்டாக இருந்துள்ளது. லைட் போட்டால் அசிங்கமாக தெரிவது போல் உள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்திய எம்ஜிஆர் சவுக்கார் ஜானகியை அழைத்து பல படங்களில் கவுரவமான கேரக்டர் எல்லாம் பண்றீங்க. இதுவும் நல்ல கேரக்டர் தான், ஆனால் இந்த உடை உங்களுக்கு ரொம்ப ட்ரான்ஸ்பரண்ட்டா இருக்கு, லைட் போட்டால் வெங்காயத்தோல் மாதிரி தெரிகிறது, இந்த உடை அணிந்து நீங்கள் நடித்தால் மற்ற படங்களில் நீங்கள் பண்ணிக் கொண்டிருக்கும் கேரக்டரில் இமேஜ் கெட்டுப் போய்விடும் என்று கூறி உடையை மாற்றுமாறு எம்ஜிஆர் கூறியுள்ளார்.