Categories: சினிமா

மேடையில் வழங்கப்பட்ட பரிசு.. எம்ஜிஆர் யாருன்னு கேட்ட நாகேஷ்.. குலுங்கி குலுங்கி சிரித்த மக்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் நாகேஷ். அவருடைய அலட்டிக் கொள்ளாத முக பாவங்களும் ஆபாசம் இல்லாத காமெடி வரிகளும், உடல் அசைவுகளும் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை, அவரைப்போல் யாராலும் வர முடியாது என்று இன்று வரை நிரூபித்துள்ளது. அவரது ஏறு இறங்கும் குரல் ஜாலம், மாறும் உடல் மொழி, ஒல்லியான உடம்பை வைத்துக்கொண்டு அருமையான நடனம் மற்றும் கவலையை மறக்க செய்யும் சிரிப்புக்கு கேரண்டி தரும் நகைச்சுவை பேச்சு என்று ஆல்ரவுண்டராக வலம் வந்தவர். புரட்சித்தலைவரின் பல திரைப்படங்களில் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு புகழ் பெற மக்கள் திலகமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

அப்போது நாகேஷ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம். அதில் ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு நாகேஷை அழைத்துள்ளனர். அந்த நாடகத்திற்கு தலைமை தாங்க எம்ஜிஆர் வந்துள்ளார். நாடகத்தில் நாகேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் அட்டகாசமாக நடித்துக் கொண்டிருந்தார். அதில் வயிற்று வலி நோயாளி வேடம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது அவரை இயக்குனர் மேடைக்கு போக சொல்ல, இருங்க சார் நான் ஒரு வயிற்று வலி நோயாளி மெதுவா தான் போக முடியும் என்று கூறி அப்பவே தனது காமெடியை தொடங்கி விட்டார்.

மேடையில் அவருக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை தாண்டி அவரே தனது பாணியில் பல வசனங்களை பேசியுள்ளார். மேடையில் நிஜ நோயாளியாகவே மாறி மாஸ் காட்டினார். எம்ஜிஆர் நாகேஷின் நடிப்பை பார்த்து வயிறு குலுங்க சிரித்தாராம். அங்கு வந்திருந்த மக்களும் நாகேஷின் காமெடிக்கு சிரித்துள்ளனர். நாடகம் முடிந்த பிறகு நாகேஷ் மேடைக்கு அழைத்து ஒரு கப்பை கொடுத்துள்ளார் எம்ஜிஆர். அதனை வாங்கிய நாகேஷ், எம்ஜிஆரை பார்த்து, அண்ணே எல்லாரும் முன்னாடியும் கப்ப கொடுத்துட்டீங்க அப்புறமா புடுங்கிக்க மாட்டீங்களே என்று கூறியுள்ளார்.

மேலும் நான் அவ்வளவு ஒன்னும் நடக்கல என்று நாகேஷ் சொல்ல அதை கேட்டதும் சிரித்துக் கொண்டே எம்ஜிஆர் நீதாம்பா உண்மையான காமெடியன் என்று மனதார வாழ்த்தி உள்ளார். பிறகு மேடையில் இருந்து இறங்கி வந்த நாகேஷ் அங்கிருந்த இயக்குனரிடம் இவர் யார் என்று கேட்க, அவர்தான் எம்ஜிஆர் என்று அவர் கூறியுள்ளார். எம்ஜிஆர் யார் என்று தெரியாமல் நாகேஷ் பரிசு வாங்கியுள்ளார். நாகேஷ் எம்ஜிஆருடன் 45 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

அடப்பாவிகளா… அது தெய்வத்தோட அவதாரம் இல்லடா… பச்சைக் குழந்தைக்கு வந்த நோய்… பிஞ்சு குழந்தையின் கண்ணீரை வைத்து… வேடிக்கை காட்டும் மூடநம்பிக்கை…!

மூடநம்பிக்கை மற்றும் அறியாமை காரணமாக, மருத்துவக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளைத் தெய்வத்தின் அவதாரமாகச் சித்தரிக்கும் விநோதமான செயல்கள் நம் சமூகத்தில்…

50 seconds ago

“வீட்டிற்குள் புகுந்து பெண் மீது கொடூரத் தாக்குதல்…” இரவில் அராஜகம் செய்த போலீசார்… அதிர வைக்கும் வைரல் வீடியோ…! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாண்பூர் மாவட்டம் முங்கராபாட்ஷாபூர் பகுதியில், போலிஸார் சிலர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த பெண்ணை…

4 minutes ago

போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பயங்கரம்…! பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற உறவினர்… திருமணத்திற்கு சென்ற போது கொடூரம்… குலை நடுங்க வைக்கும் வீடியோ…!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுராள்ள காவல் நிலையத்திற்கு எதிரிலேயே நடுரோட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான கொடூரக் கொலைச்…

11 minutes ago

திக் திக் நிமிடங்கள்… நடுரோட்டில் வாலிபர் மீது காரை ஏற்ற முயற்சி… தடிகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட கும்பல்… ஜெய்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…

28 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன், வாலிபர்…. மர்ம கும்பலின் வெறித்தனமான தாக்குதல்…. பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…

30 minutes ago

உன்னை வேறு யாருக்கும் தர மாட்டேன்… காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு… என்கவுண்டரில் சிக்கிய காதலன்… உ . பி – யில் நடந்த கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…

35 minutes ago