Categories: சினிமா

சீரியல் நடிகை சாந்தி மாஸ்டரின் நிஜ மருமகள் இவங்கதானா?.. அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

Spread the love

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றான மெட்டி ஒலி சீரியலில் வரும் அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. அந்தப் பாடலில் டான்ஸ் மாஸ்டர் சாந்தி எவ்வளவு அழகாக நடனம் ஆடி இருப்பார். அப்போது அந்தப் பாடல் youtube சேனல்களில் அதிகமாக பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சாந்தி டான்ஸ் மாஸ்டராக மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஓ போடு பாடலுக்கு பயங்கரமாக நடனமாடி இருப்பார். அதேசமயம் பல திரைப்படங்களிலும் குரூப் டான்ஸராக இவர் நடனமாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சீரியல் பக்கம் திரும்பிய சாந்தி மெட்டிஒலி மற்றும் நாதஸ்வரம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதேசமயம் விஜய் டிவியில் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே இவர் வெளியேற்றப்பட்டார். அது அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வயதில் மூத்த போட்டியாளராக ஆறாவது சீசனில் கலந்து கொண்ட சாந்தியை ஆரம்பத்திலேயே வெளியேற்றி விட்டனர். அதன் பிறகு ரி என்ட்ரி கொடுத்த சாந்தி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சக்திவேல் என்ற சீரியலில் மூவர் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் முதலில் மருமகளை கொடுமை செய்யும் மாமியாராக இருந்த நிலையில் தற்போது தனது மருமகள்களை அன்பாக கவனித்துக் கொள்ளும் மாமியாராக மாறிவிட்டார். இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தனது தந்தை சிறுவயதிலேயே தங்களை விட்டு விலகிப் போய்விட்ட பிறகு தான் குடும்ப பாரத்தை தலையில் சுமந்து தன்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டேன் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

அதனைப் போலவே தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தன் கணவரும் விலகிப் போனதால் தனது மகனை கஷ்டப்பட்டு தானே வளர்த்து வந்தேன் எனவும் கூறி இருந்தார். இப்படியான நிலையில் இணையத்தில் இவர் குறித்த ஒரு செய்தி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சாந்தி மாஸ்டரின் மகனான முரளிக்கு சக்திவேல் சீரியலில் சாந்தியின் ரீல் மருமகளாக நடித்த நடிகை சந்தியாவோடு திருமணம் முடித்துள்ளார். சீரியலில் ரீல் மாமியார் மருமகளாக நடித்து வந்த இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் மாமியார் மருமகளாக ஆகிவிட்டனர்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் இவர்களுக்கு திருமணமும் நடந்தது. சமீபத்தில் இருவரும் ஒரே விவாத மேடையில் கலந்து கொண்டு இருந்தபோது பேசிய சந்தியா, சக்திவேல் சீரியலில் முதல் நாள் சூட்டிங் சென்று இருந்தபோது இவர்களை பார்த்து பேசுறதுக்கே நா ரொம்ப பயந்தேன். ஆறு மணிக்கு ஷூட்டிங் நடந்தது எட்டு மணிக்கு என்னை பார்த்து என்னுடைய பையன கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்டுட்டாங்க. அதன் பிறகு எங்க வீட்லயும் சரின்னு சொல்லி கல்யாணம் ஆயிடுச்சு என்று சக்திவேல் சீரியலில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சந்தியா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

52 seconds ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

11 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

15 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

16 minutes ago

சர்ச்சையில் சிக்கினார்..! “பாலியல் அத்துமீறல், போதைக் கலாச்சாரம்” முதல்வர் முன்னிலையிலேயே குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

20 minutes ago

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

26 minutes ago