Categories: சினிமா

சச்சின்-ஆல் அடித்த அதிர்ஷ்டம்.. ஆஸ்தான படங்களை ரீ ரிலீஸ் செய்ய தூசி தட்டி எடுக்கும் கலைப்புலி தாணு..!

Spread the love

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் இசை என பன்முக திறமை கொண்டவர் தான் கலைப்புலி எஸ் தானு. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் படங்களை வைத்து புது இலக்கணம் படைத்தவர். இதுவரை யாரும் எதிர்பாராத வகையில் இவருடைய படங்களுக்கான விளம்பரங்களை உருவாக்கி இந்திய அளவில் பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவில் இவருக்கு தெரியாத துறையே கிடையாது.

தற்போது சச்சின் படத்தின் ரீ ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு இவர் முக்கிய காரணமாக இருக்கிறார். விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த படத்தைக் கொண்டாடும் விதமாக கடந்த வாரம் இந்த திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு ரீ ரிலீஸ் செய்தார்.  இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கலைப்புலி தானோ அடுத்ததாக ரீ ரிலீஸ் செய்ய உள்ள படங்கள் குறித்த விவரமும் வெளியாகி உள்ளது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்:

இயக்குனர் ராஜு மேனன் இயக்கத்தில் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தப்பு உள்ளிட்டோ நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தனு தயாரித்திருந்த நிலையில் இந்த வருடம் இறுதிக்குள் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

காக்க காக்க:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கலைபுலி தாணு தயாரிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காக்க காக்க. இந்த திரைப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக ஜோதிகாவும் வில்லனாக ஜீவனும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த திரைப்படத்தை இந்த வருடம் இறுதியில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கலைபுலி தானு தெரிவித்துள்ளார்.

தெறி:

கடந்த 2016 ஆம் ஆண்டு கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தெறி. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் நடித்த நிலையில் எமி ஜாக்சன், சமந்தா மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்த நிலையில் நடிகை சமந்தா தனது சொந்த குரலிலேயே அனைத்து வசனமும் படத்தில் பேசி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டு ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார்.

கபாலி:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கபாலி. இந்தத் திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்த நிலையில் கலைபுலி எஸ் தானு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் மற்றும் ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை 2026 ஆம் ஆண்டு ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக கலைப்புலி தானு தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

51 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago