முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்குச் செல்பவர்கள், அங்குள்ள வழிபாட்டு முறைகளைச் சரியாகப் பின்பற்றுவது மிகுந்த பலனைத் தரும். வீட்டிலிருந்து கிளம்பும்போதே குலதெய்வத்தை வணங்கி, ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து எடுத்துச் செல்ல வேண்டும்.
அங்குச் சென்றதும் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின்னர் முருகப்பெருமான் தனது வேலால் உருவாக்கிய புனிதமான ‘நாழிக்கிணற்றில்’ குளிக்க வேண்டும். அதன் பிறகு ஈர உடையுடன் தரிசனம் செய்யாமல், உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு துண்டுகை விநாயகரை வணங்கித் தேங்காய் உடைத்த பின்னரே மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.
கோவிலுக்குள் மூலவர் சுப்பிரமணியரையும், சண்முகரையும் மனமுருக வேண்டி வழிபட வேண்டும். அங்கு வழங்கப்படும் பன்னீர் இலை பிரசாதம் சகல வியாதிகளையும், தோஷங்களையும் நீக்கவல்லது. மேலும், கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுவது பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கும்.
குழந்தை வரம் வேண்டுவோர் வள்ளிக் குகையில் தொட்டில் கட்டிப் பிரார்த்தனை செய்யலாம். இறுதியாகக் கொண்டு சென்ற நாணயத்தை அங்குள்ள மரத்தில் கட்டி வேண்டிவிட்டு, வேண்டுதல் நிறைவேறிய பின் உண்டியலில் காணிக்கைச் செலுத்துவது இத்தலத்தின் முக்கிய மரபாகும்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…