தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. “இனி க்யூவில் நிற்க வேண்டாம்… கையில் QR Code இருந்தா போதும்”… டாஸ்மாக் எடுத்த அதிரடி முடிவு….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை இன்று முதல் தொடங்குகிறது. நுகர்வோர் https://tasmace2e.in/ என்ற டாஸ்மாக்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள 4,048 கடைகளில் கிடைக்கும் மதுவகைகள் மற்றும் அவற்றின் விலையை அறிந்து முன்பதிவு செய்ய முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தைப் பயன்படுத்த 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவுடன் கியூ.ஆர் கோடுடன் கூடிய ரசீதும், சம்பந்தப்பட்ட கடைக்கான கூகுள் வரைபட வழிகாட்டுதலும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கடைக்குச் சென்று அந்த ரசீதைக் காண்பித்துத் தங்களுக்குத் தேவையான பாட்டில்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புதிய ஆன்லைன் முறை டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதில் மிக முக்கியமான பங்க வகிக்கும். நுகர்வோர் தங்கள் விருப்பமான பிராண்டுகள் கடைகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடிவதால், ஊழியர்கள் “ஸ்டாக் இல்லை” என்று பொய் கூறி குறிப்பிட்ட பிராண்டுகளை மறைத்து வைக்க முடியாது. மேலும், இணையதளத்திலேயே அனைத்து விவரங்களும் நேரடியாகத் தெரிவதால், சரக்கு இருப்பை மறைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் முறைகேடுகளும் பெருமளவில் தவிர்க்கப்படும்.

   

குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் தொகையை ஊழியர்கள் கமிஷனாக வசூலிக்கிறார்கள் என்ற நீண்டகாலக் குற்றச்சாட்டுக்கு இந்த திட்டம் முற்றுப்புள்ளி வைக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள அசல் எம்.ஆர்.பி விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது. நுகர்வோருக்குச் சிரமமின்றி விரைவாக மதுபானங்களை விநியோகிக்கும் வகையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு இப்புதிய ஆன்லைன் அமைப்பைக் கையாள்வதற்கான விரிவான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.