ஐயோ இப்படியா ஆகணும்…? புனித யாத்திரை முடிந்து வந்த வாலிபர்… பைக் விபத்தில் சிக்கியதால் கொடூரம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 6, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள நந்தப்ரயாக் அருகே அமைந்துள்ள காட் திராஹா எனும் பகுதியில் பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான ஷேர் பாபா என்ற நிஹாங் சீக்கிய இளைஞர், தனது ஹேமகுண்ட் சாஹிப் புனித யாத்திரையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பேருந்து மீது மோதியதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். விபத்து நடந்த திருப்பமான பகுதியில் தவறான முறையில் நிறுத்தப்பட்டிருந்த பால் வாகனமும், சேதமடைந்த சாலைகளுமே இந்த விபரீதத்திற்கு முதன்மை காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய இளம் யாத்ரீகரின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரிடையேயும் அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.