அட கொடுமையே… இடம் பிடித்த தகராறில்… வியாபாரி மீது கொடூரத் தாக்குதல்… ரத்தக் களறியான காய்கறிச் சந்தை… சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்…!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் காய்கறி கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வியாபாரி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட வியாபாரிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடை வைக்கும் இடம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து வியாபாரியைத் தாக்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

   

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த வியாபாரி சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பதிவான சிசிடிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் பிம்ப்ரி-சின்ச்வாட் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பிற வியாபாரிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.