கர்நாடகாவுக்கு பறக்கும் 13 பேர் கொண்ட பவர்ஃபுல் டீம்… DK சிவகுமாருடன் விஜய் நடத்தப்போகும் அக்னிப் பேச்சுவார்த்தை… தலைமைச் செயலகத்தில் அவசர கூட்டம்…..!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தொடர்ந்து தனது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று, அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, காவிரி விவகாரம் குறித்து கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லவுள்ளார். அவருடன் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், முதல்வரின் தனிச் செயலாளர்கள், ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் உமாபதி மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் உள்ளிட்ட 13 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவும் உடன் செல்கிறது. தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.