மேகதாது அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும், அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் வாழ்வாதாரமும், விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளின் நலனை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் உடனடியாக அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
