செங்கோட்டையன் & சத்தியபாமாவுக்கு மெகா பொறுப்பு… கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் விஜய்…. அதிரும் அரசியல் களம்..!!

By Soundarya on மாசி 21, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைக் கண்காணிக்கும் வகையில் 42 பேர் கொண்ட ஒரு புதிய குழுவை அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையன் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்தபடியாக, செங்கோட்டையன் தேர்தல் பணிகளுக்கான முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், செங்கோட்டையனுடன் இணைந்து தவெகவில் சேர்ந்த முன்னாள் எம்பி சத்தியபாமாவுக்கும் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களின் தேர்தல் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனின் நீண்டகால அரசியல் அனுபவம் 2026 தேர்தலில் தவெகவின் வெற்றிக்கு ஒரு பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.