“ரேஷன் கடை ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்.. 15% சம்பள உயர்வு… ஸ்டாலின் அரசின் அதிரடி அரசாணை…!”

Spread the love

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு சுமார் 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட படிகளை வழங்கி தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய மாற்றத்தின் மூலம் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் சுமார் 26,020 ஊழியர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். குறிப்பாக, புதிதாகச் சேரும் பணியாளர்களுக்கான ஓராண்டுத் தொகுப்பூதியம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய ஊதிய விகிதத்தின்படி, முதல் ஓராண்டுப் பணியில் இருக்கும் விற்பனையாளர்களுக்குத் தொகுப்பூதியம் ரூ.6,250-லிருந்து ரூ.7,500 ஆகவும், கட்டுநர்களுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.6,600 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுப் பணியை முடித்தவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதில் விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையிலும், கட்டுநர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.35,000 வரையிலும் புதிய ஊதியக்கற்றை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை ஊதியத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் இதர பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வீட்டு வாடகைப் படி மற்றும் நகர ஈட்டுப்படியில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,500-ம், கட்டுநர்களுக்கு ரூ.1,200-ம் வீட்டு வாடகைப் படியாக வழங்கப்படும். இதர பகுதிகளில் இப்பணி செய்பவர்களுக்கு முறையே ரூ.1,200 மற்றும் ரூ.1,000 வரை வழங்கப்படும். மேலும், கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை தனிப்படியும் வழங்கப்பட உள்ளது.

சிறப்புச் சலுகைகளாக மலைவாழ் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் வரை மலைவாழ் படியும், குளிர் காலங்களில் ரூ.400 குளிர் காலப் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.2,500 போக்குவரத்துப் படி தொடர்ந்து வழங்கப்படும். மேலும், ஒரே பதவியில் 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குத் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைகள் வழங்கப்பட்டு, தலா 3 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

“மெஜாரிட்டி இல்லை.. 100+ எதிர்க்கட்சிகள்”… விஜய்க்கு காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை’… 2006-ல் கருணாநிதிக்கு ஏற்பட்ட அதே சிக்கல்…!

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்',…

7 minutes ago

‘ஆட்சி அமைத்தாலும் இது இல்லைனா கஷ்டம்’… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் பி.ஆர். சுந்தர் உடைத்த உண்மை… அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…

18 minutes ago

“நண்பனுக்காக போன் செய்த அஜித்” – விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ‘தல’ கொடுத்த சர்பிரைஸ்…!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…

26 minutes ago

50 ஆண்டுகால திராவிட அரசியலை ஓரம் கட்டிய விஜய்… சைலண்ட்டாக சம்பவம் செய்த தளபதி… தமிழக அரசியலில் மெகா புரட்சி..!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…

28 minutes ago

பாத்திரம் கழுவும் பெண் டூ MLA..! 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… மாபெரும் புரட்சி செய்த பிரதமர் மோடி..!!

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…

33 minutes ago

BREAKING: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்… அரியணை ஏறும் விஜய்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…

35 minutes ago