தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில், லண்டனில் சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், அதன் ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த முதலீட்டை மேற்கொள்கிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகள் மேம்படுத்தப்பட்டு, சுமார் 7,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம்வர்தனா மதர்சன் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கையெழுத்திட்டுப் பரிமாறிக்கொண்டனர்.
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…