வில்லியாக நடிக்க ஆசைப்பட்ட மீனாவை வேண்டாம் என நிராகரித்த ரஜினி.. கடைசி வரை கோபம் தீரவேயில்லையாம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் விறுவிறுவென தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்தார். முரட்டுக்காளை திரைப்படம் அடைந்த வெற்றியின் காரணமாக வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக உருவானார்.

   

அதன் பின்னர் 80 களிலும் 90களிலும் அவர் வசூல் மன்னனாக பல சாதனைகளை தமிழ் சினிமாவில் படைத்தார். அதிலும் 90 களில் அவர் அடைந்த வெற்றி அவரை அரசியல் ரீதியாகவும் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. 96ல் நடந்த தேர்தலில் அவர் ஒரு அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க, அந்த கூட்டணியும் வெற்றி பெற்றது. அதனால் அவருக்கு அரசியல் ஆர்வமும் ஏற்பட்டது.

அதன் பின்னர் அவர் அடிக்கடி அரசியல் சார்ந்த கருத்துகளைக் கூறி வந்தார். இதனால் ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் இடையே ஒரு மோதல் போக்கு நிலவியது. அவரைத் தாக்கிதான் ரஜினிகாந்த் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மீனாதான் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். அவரும் ரஜினிக்கு வில்லியாக நடிக்க ஆர்வமாக இருந்தாராம். ஆனால் படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்தான் “மீனாவுக்கு குழந்தை முகம். அவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக இருக்காது” என்று சொல்லிவிட்டாராம்.

அதை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்தும் மீனா வேண்டாம் என சொல்லிவிட அதன் பின்னர் பல கதாநாயகிகளை தேடி கடைசியில்தான் ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்துள்ளார்கள். படம் ரிலீஸாகி அந்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து தனக்கு இந்த வேடம் கிடைக்காமல் போய்விட்டதே என்று ரஜினி மீதும் இயக்குனர் மீதும் கோபத்தில் இருந்தாராம். இதை ரஜினியே ஒரு மேடையில் பகிர்ந்துள்ளார்.