கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீண்டும் வரும் மீனா…. கலக்கல் மாடர்ன் போட்டோஷூட் வீடியோ உள்ளே….

By Begam

Published on:

கணவர் இறந்த சோகத்திலிந்து மீண்டு வரும் மீனா மாடர்ன் உடையில் எடுத்த அழகான வீடியோ ஒன்று தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரசிகர்களால் கண்ணழகி என வர்ணிக்கப்பட்ட மீனா ‘அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பின்னாளில் அவருடனே ஜோடியாக நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.

   

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் மரணம் அடைந்தார்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மீனா தனது சினிமா தோழிகளான  குஷ்பூ, சங்கீதா, கலா மாஸ்டர் உள்ளிட்டவர்களுடன் அடிக்கடி வெளியில் சென்று வருகிறார். தற்பொழுது ஃபோட்டோ ஷூட் பக்கம் திரும்பி உள்ளார் நடிகை மீனா. சமீபத்தில் அவர் மாடர்ன் உடையில் எடுத்த போட்டோஷூட் வீடியோ ஒன்று  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

author avatar