நடிகை திரிஷாவின் அப்பா இவர்தானா?… வெளியான UNSEEN புகைப்படம் உள்ளே….

By Begam

Published on:

நடிகை திரிஷா தனது தந்தையுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் 20 ஆண்டு காலமாக ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில்  பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தமிழ் திரை உலகில் ‘லேசா லேசா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. தற்போது மணிரத்தினத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தில் குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது த்ரிஷா தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் அவருடைய அப்பாவை யாரும் பார்த்ததில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு அவருடைய புகைப்படங்கள் அதிகளவு வெளிப்பட்டதில்லை. தற்பொழுது நடிகை திரிஷா தனது அப்பாவுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…..