அடச்சீ… பள்ளி உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா… 12 மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஊடக ஊழியர் கைது… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

மேரிலாந்து உயர்நிலைப் பள்ளியின் உடை மாற்றும் அறையில் மாணவிகளை ரகசியமாக கேமராவில் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஊழியர் ஜேம்ஸ் முல்ஹெர்ன் III மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வால்டர் ஜான்சன் உயர்நிலைப் பள்ளியின் நாடக அரங்கில் இருந்த அறையில் கேமரா இருப்பதை இரு மாணவிகள் கண்டறிந்து, அதன் மெமரி கார்டை ஆய்வு செய்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதில் பெறப்பட்ட காணொளியில் ஊடகச் சேவை தொழில்நுட்ப வல்லுநரான முல்ஹெர்ன் கேமராவை வைப்பது உறுதியானதை அடுத்து காவல்துறையின் விசாரணை தொடங்கப்பட்டது.

காவல்துறையினர் கைாப்பற்றிய மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ததில், 2015-ம் ஆண்டு வரையிலான காணொளிகள் மீட்கப்பட்டு மேலும் எட்டு மாணவிகள் அடையாளம் காணப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறார்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக முல்ஹெர்ன் மீது மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

   

கூடுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முல்ஹெர்னுக்கு ஒரு லட்சம் டாலர் தனிநபர் பிணையில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லக்கூடாது, சிறார்களுடன் தொடர்புகொள்ளக் கூடாது மற்றும் தனது மகனை மேற்பார்வையின் கீழ் மட்டுமே சந்திக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேரிலாந்து சட்டப்படி, அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.