அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசிய அவர், பெயரைக் குறிப்பிடாமல் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அரசியல் அரங்கில் காணாமல் போகும் நிலையில் இருந்த ஒரு கட்சிக்கு 10 சட்டமன்ற இடங்களையும், பல மாவட்டங்களில் கிளைகளே இல்லாத மற்றொரு கட்சிக்கு 8 இடங்களையும் வாரி வழங்கிய திமுக, தங்களை அவமானப்படுத்திவிட்டதாக ஆதங்கப்பட்டார்.
ஒன்பது ஆண்டுகால கூட்டணியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தொண்டர்களின் காயங்களுக்கு விரைவில் மருந்திடும் வகையில் தன்மானத்தைக் காக்க பொதுக்குழுவில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்று கூறி கூட்டணி முறிவிற்கான தடையை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் விஜய் இன்னும் 6 மாத காலத்திற்குள் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வார் என்றும், அவரிடம் தெளிவான கருத்து இருக்கிறது என்றும் விஜய்க்கு வைகோ பகிரங்க ஆதரவு அளித்துள்ளார். அதேநேரம், தவெகவுடன் இணைய மதிமுக ரூ.50 கோடி பேரம் பேசியதாக எழுந்த வதந்திகளை மறுத்த வைகோ, தனக்கு பணத்தாசை துளியும் கிடையாது என்றும், கட்சியின் வசந்த காலம் வரப்போகிறது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…