“என் வீட்ல இருந்து ஒரு பைசா கூட எடுக்கல” நான் எந்த தவறும் செய்யாத பரிசுத்தமானவன்… ரெய்டு குறித்து எ.வ வேலு பேட்டி..!!

Spread the love

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து அவர் அளித்த பேட்டியின் சட்டப்பேரவையில் திமுக மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்குமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்திக் கேள்வி கேட்டதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், 2022-ஆம் ஆண்டு கரூரில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்போது சம்பந்தமே இல்லாமல் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சோதனையில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவல் முற்றிலும் வடிகட்டிய பொய் என்று அவர் மறுத்துள்ளார். தன் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரு பைசாவைக் கூட எடுத்துச் செல்லவில்லை என்றும், தங்களை அச்சமூட்டவே இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நாங்கள் ‘மிசா’ போன்ற கடுமையான காலகட்டங்களையே எதிர்கொண்ட இயக்கம் என்பதால், இந்தச் சோதனைகளுக்கு அஞ்சப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை” என்று கூறிய அவர், தான் எந்தத் தவறும் செய்யாத பரிசுத்தமானவர் என்றும், தங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே என்பதால் சட்டப்படி நீதிமன்றம் சென்று தான் நிரபராதி என்பதை நிச்சயம் நிரூபிப்பேன் என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

4 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

4 மணத்தியாலங்கள் ago